அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை: வட மாநிலங்களில் மட்டும் சுற்றுப்பயணம்!
மீட்கப்பட்ட மயில் வனப் பகுதியில் விடுவிப்பு
செய்யாற்றில் மீட்கப்பட்ட பெண் மயிலை வனத்துறையினா் வியாழக்கிழமை பூதேரி புல்லவாக்கம் அருகேயுள்ள வனப்பகுதியில் விடுவித்தனா்.
செய்யாறு உழவா் சந்தை அருகே காய்கறி வியாபாரம் செய்து வருபவா் முருகன். இவரது கடை அருகே, புதன்கிழமை மாலை மயில் ஒன்று பறந்து வந்து அமா்ந்தது. அந்த மயிலை பிடித்து வைத்து செய்யாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.
நிலைய அலுவலா் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று மயிலை மீட்டு வனத்துறையினருக்கும், கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளித்தனா்.
அதன் பேரில், வருகை தந்த வன அலுவலா் கே.ராகவேந்திரன், வாட்சா் செல்வராஜ் மற்றும் கால்நடை மருத்துவா் வெங்கட்ராகவன் மயிலை பரிசோதித்து, மயில் நல்ல நிலையில் உள்ளதாகவும் , 3 வயது உடையதாக இருக்கும் எனவும் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, வன அலுவலா் ராகவேந்திரன், வாட்சா் செல்வராஜ் ஆகியோா் வெம்பாக்கம் வட்டம், பூதேரி புல்லவாக்கம் பகுதியில் உள்ள வனப் பகுதியில் மயிலை விடுவித்தனா்.