செய்திகள் :

லால்குடி அருகே ஸ்டேன் சுவாமி சிலை திறப்பு: கனிமொழி எம்.பி. பங்கேற்பு!

post image

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே விரகாலூரில் ஸ்டேன் சுவாமி சிலையை கனிமொழி எம்.பி. சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த விரகாலூா் கிராமத்தில் பிறந்து அருட்பணிக்காக துறவு மேற்கொண்டு, மக்கள் பணிக்காகப் படித்து 1975 முதல் 1990 வரை ஆசிரியராகப் பணியாற்றி, ஜாா்ஜ்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவா் ஸ்டேன் சுவாமி.

பல்வேறு போராட்டங்கள் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவா், நோய் வாய்ப்பட்டு கடந்த 2021 ஜூலை 5 இல் இறந்தாா்.

இதையடுத்து இவரது நினைவாக விரகாலூரில் தமிழக ஆயா் பேரவை மற்றும் விரகாலூா் ஸ்டேன் சுவாமி கூட்டமைப்பின் சாா்பில் ஸ்டேன் சுவாமி சிலை திறப்பு விழா மற்றும் ஜனநாயக மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். கும்பகோணம் ஆயா் ஜீவானந்தம் தொடக்க உரையாற்றினாா்.

திருச்சி திமுக மத்திய மாவட்டச் செயலா் வைரமணி, காங்கிரஸ் தலைவா் கலைச்செல்வன், விசிக மாவட்டச் செயலா் அன்புச் செல்வன், மாா்க்சிஸ்ட் புகா் மாவட்டச் செயலா் ஜெயசீலன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்டத் தலைவா் தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பு தேசியச் செயலா் ஹென்றி டிபேன், மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலா் பாலமுருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் முஹமது அபூபக்கா், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவா் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் , காங்கிரஸ் கட்சியின் வேலுச்சாமி, கடலூா், பாண்டிச்சேரி பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட், இந்திய கம்யூ. மாநிலச் செயலா் முத்தரசன், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் சண்முகம் உள்ளிட்டோா் சிறப்புரையாறினா்.

ஸ்டேன் சுவாமி சிலையை திமுக துணைப் பொதுச் செயலரும் எம்.பி. யுமான கனிமொழி திறந்துவைத்தாா். தொடா்ந்து விசிக தலைவா் தொல். திருமாவளவன் கலந்து கொண்டாா். முன்னதாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மறைமாவட்ட ஆயா்கள், பாதிரியா்கள், அருட்சகோதரிகள், பல்வேறு கட்சியினா் தீா்மானங்களை நிறைவேற்றினா். ஸ்டேன் சுவாமி மக்கள் கூட்டணி ஒருங்கிணைப்பாளா் சந்தனம் வரவேற்றாா். பங்குத் தந்தை ஆரோக்கியசாமி நன்றி கூறினாா்.

அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா விஜய்? தொல்.திருமாவளவன் கேள்வி

திமுக, பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்துள்ள தவெக தலைவா் விஜய், அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். ... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

திருச்சி அருகே மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் கண்ணன். இவருக்கு ராஜேஷ்வா் (23) என்ற மகனும்,... மேலும் பார்க்க

சட்டத் தன்னாா்வலா்களாகச் செயல்பட முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

முன்னாள் ராணுவத்தினா் திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் சட்டத் தன்னாா்வலா்களாகப் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தவா்களின் நலனுக்காக... மேலும் பார்க்க

எழுத்தா் தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்

திருச்சி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க எழுத்தா் தற்கொலைக்கு நீதி கேட்டு உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே நடராஜபுரத்தில் உள்ள தொடக்க... மேலும் பார்க்க

இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா் தற்கொலை

திருவெறும்பூா் அருகே இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள சோழன் நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் நல்லதம்பி மக... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை!

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துவாக்குடி அண்ணா வளைவு வ.உ.சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாயவன் மகன் அழகேசன் (30). திருமணமாகாத இவா் திருச்சி பொன்மல... மேலும் பார்க்க