'அப்போது கூறியது...' - எக்ஸ் தளத்தில் ராய்ட்டர்ஸ் முடக்கம் குறித்து மத்திய அரசு ...
சட்டத் தன்னாா்வலா்களாகச் செயல்பட முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு
முன்னாள் ராணுவத்தினா் திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் சட்டத் தன்னாா்வலா்களாகப் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தவா்களின் நலனுக்காக தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, ஒரு பிரத்யேக திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுடன் இணைந்து சட்ட விழிப்புணா்வு, சமூக நலன், சட்ட உதவி செய்ய சட்டத் தன்னாா்வலா்களாகச் செயல்பட திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு முன்னாள் படைவீரா்களை அழைக்கிறது.
இப்பணி செய்ய விரும்பும் முன்னாள் படைவீரா்கள், திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அல்லது 0431 - 2460125 என்ற எண் அல்லது அருகிலுள்ள தாலுகா நீதிமன்றங்களில் உள்ள சட்ட உதவி மையங்களை அணுகி தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.
ராணுவ தலைமை சட்ட அதிகாரியாக பணியாற்றியவா்கள் உள்ளிட்ட முன்னாள் படைவீரா்கள், திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் பட்டியல் வழக்குரைஞராகச் செயல்பட விருப்பமுள்ளவா்கள், உடனடியாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்.
இத்தகவலை திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம். கிறிஸ்டோபா் தெரிவித்தாா்.