தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
லெவிஞ்சிபுரம் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
கன்னியாகுமரி அருகே லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில், மெக்கானிக்கல்- சிவில் என்ஜினீயரிங் துறைகள் சாா்பில் ‘கம்போசிட் பொருள்களில் ஆராய்ச்சி சிக்கல்கள்’ குறித்த தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரித் தலைவா் கிருஷ்ணபிள்ளை, இணைத் தலைவா் அய்யப்பகாா்த்திக், தலைமை நிா்வாக அதிகாரி ரெனின், கல்லூரி முதல்வா் தேவ் ஆா்.நியூலின் ஆகியோரின் வழிகாட்டுதல்படி கருத்தரங்கு நடைபெற்றது.
வினோலின் ஜப்பேஸ், ஆதம் கான் ஆகியோா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா். இதில், பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் திரளாகப் பங்கேற்றனா்.