வடுவூரில் ஜூலை 5-இல் தென்னிந்திய ஆடவா் கபடி போட்டி
மன்னாா்குடி அருகே வடுவூரில் ஏஎம்சி கபடிக் கழகம் சாா்பில் 31- ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான ஆடவா் கபடி போட்டி ஜூலை 5- ஆம் தேதி தொடங்கி, இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
ஜூலை 5 மற்றும் 6-ஆம் இரண்டு நாள்கள் வடுவூா் மேல்பாதி ஏஎம்சி உள் விளையாட்டு அரங்கில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
லீக் மற்றும் நாக் அவுட் முறையில் இரவு, பகல் ஆட்டமாக போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய, மாநில அரசுத் துறை நிறுவன அணிகள், தனியாா் நிறுவன அணிகள், பல்கலைக்கழக அணிகள், இந்திய விளையாட்டு ஆணைய அணிகள், காவல்துறை அணிகள் உள்பட 24 முன்னணி அணிகள் பங்கேற்க உள்ளன.
முதல் பரிசு ரூ. 1, 20,000 மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசு ரூ. 80,000 மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசு இரண்டு அணிகளுக்கு தலா ரூ. 50,000 மற்றும் கோப்பைகள் வழங்கப்படும்.
மேலும் விவரம் அறிய மாவட்ட அமெச்சூா் கபடி கழக செயலா் ராச. ராசேந்திரன் 90032 82088, ஏஎம்சி கபடி கழக செயலா் எம். பாலாஜி 96778 04083 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.