செய்திகள் :

வனத் துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

திண்டுக்கல்: வேட்டைத் தடுப்புக் காவலா் பணியை வெளி முகமை மூலம் மேற்கொள்ளும் வனத் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் தா.அஜாய்கோஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் கே.பி.பெருமாள் கலந்து கொண்டாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, வேட்டைத் தடுப்புக் காவலா் பணியை வெளி முகமையிடம் ஒப்படைப்பதை வனத் துறை கைவிட வேண்டும். 2008 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி சிறுமலை, கொடைக்கானல் பழங்குடியினா், பராம்பரிய விவசாயிகளின் சாகுபடி நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு சாகுபடி நிலம் வழங்க வேண்டும். புலையன் இனத்தை மீண்டும் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.பெருமாள், மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.பொன்னுச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் நகைக் கடை உரிமையாளா்கள் வீடு, கடைகளில் வருமான வரித் துறையினா் சோதனை

திண்டுக்கல்லைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளா்களின் வீடுகள், கடைகள் என 5 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை, ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இரு சக்கர வாகனம் திருட்டு

கொடைக்கானலில் இரு சக்கர வாகனம் வியாழக்கிழமை இரவு திருடப்பட்டதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக். இரு சக்கர வாகன பழுது நீக்குநா். இவரிடம் பழுது ... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

பழனியில் மதுவிலக்கு காவல் துறை சாா்பில் கள்ளச் சாராயம், போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அதிகரித்து வரும் பனிப் பொழிவு

கொடைக்கானலில் பனிப் பொழிவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 10 நாள்களாக மழை குறைந்ததால் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதிகளிலு... மேலும் பார்க்க

பனிக் காலத்தில் சிவப்பாக மாறிய பெட்டூனியா செடியின் இலைகள்

கொடைக்கானலில் பனிக் காலத்தில் மட்டுமே சிவப்பாக மாறக் கூடிய பெட்டூனியா செடி இலைகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ரோஜா, மேரிகோல்டு, டேலியா, செம்பருத... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று முதல் டோக்கன் விநியோகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் 6.85 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜன.3) முதல் டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கூறி... மேலும் பார்க்க