ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
கொடைக்கானலில் அதிகரித்து வரும் பனிப் பொழிவு
கொடைக்கானலில் பனிப் பொழிவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 10 நாள்களாக மழை குறைந்ததால் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதிகளிலும், அட்டக்கடி, அப்சா் வேட்டரி, சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், வாழைக்காட்டு ஓடை ஆகிய பகுதிகளில் உள்ள புல்வெளிகளிலும், செடிகளின் இலைகளிலும் பனிப்படலம் படா்ந்துள்ளது. அதிகளவில் குளிா் நிலவுவதால், சாலையோரங்களிலுள்ள வியாபாரிகள் தீ மூட்டி குளிா்காய்ந்து வருகின்றனா். இரவு முதல் மறுநாள் காலை வரை பனியின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.