செய்திகள் :

வனவிலங்கு பூங்காவில் புலியின் சிறுநீர் அமோக விற்பனை!

post image

சீனாவிலுள்ள வனவிலங்கு பூங்கா ஒன்றில் மருத்துவ குணம் நிறைந்தவை எனக் கூறி புலியின் சிறுநீர் விற்பனை செய்யப்படுவதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்நாட்டின் சின்சுவான் மாகாணத்திலுள்ள யான் பிஃபெங்சியா வனவிலங்கு பூங்காவில் முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்து எனக் கூறி சைபீரிய புலியின் சிறுநீர் விற்பனை செய்யப்படுகிறது. 250 கிராம் பாட்டில் அளவில் சுமார் 50 யுவான் (ரூ.600) க்கு விற்பனை செய்யப்படும் இந்த புலியின் சிறுநீரை வெள்ளை ஒயினுடன் கலந்து மருத்துவக் காரணங்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்த பூங்காவின் நிர்வாகம் சார்பில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த பூங்கா நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் சிறுநீர் விற்பனை செய்யப்படும் பாட்டிலின் மீது முடக்குவாதம் தசை வலி உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தலாம் என அச்சிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த பூங்கா ஊழியர்களால் ஒரு பாத்திரத்தில் சேகரிக்கப்படும் புலியின் சிறுநீரை வெள்ளை நிற ஒயினுடன் கலந்து பாதிப்புள்ள உடற்பகுதியில் தடவி அதன் மீது இஞ்சி துகள்களை வைத்து வந்தால் முடக்குவாதம் தசை வலி உள்ளிட்ட பிரச்சனைகள் குணமாகும் என்றும் தேவைப்பட்டால் புலியின் சிறுநீரை நேரடியாக குடிக்கலாம் என்றும் அந்த பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்க விமான விபத்து: இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை! 67 பேரின் நிலை?

ஆனால், இதனை வாங்கி பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் புலியின் சிறுநீரால் தங்களக்கு எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், புலியின் சிறுநீரில் எந்தவொரு மருத்துவ குணங்களும் இல்லை எனவும் இது போன்ற செயல்களினால் புலிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, சீனாவின் பாரம்பரியத்தில் புலிகள் துணிச்சல் மற்றும் வலிமையின் அடையாளமாக கருதப்படுகின்றன. அந்நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தில் புலிகளின் எழும்புகள் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன.

ஆனால், புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதினால் அதனை பாதுகாக்கும் பொருட்டு புலிகளை வேட்டையாடுவதும் அதன் பாகங்களை வைத்து பின்பற்றப்படும் மருத்துவ முறைகளும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார்? ஆளுநர் ரவிக்கு காங்கிரஸ் கேள்வி!

காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார் என்று ஆளுநர் கூறுவாரா? என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.மகாத்மா காந்தியின் நிகழ்வுகள... மேலும் பார்க்க

காப்பகத்திலிருந்து காணாமல்போன சிறுவன்! 2 ஆண்டுகள் கழித்து மீட்பு!

புது தில்லியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன சிறுவனை அம்மாநில காவல் துறையினர் தற்போது மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தில்லியிலுள்ள தனியார் தொண்டு நிறுவனத்த... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ மேஜர் உள்பட 2 பேர் பலி!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டின் ராணுவ மேஜர் உள்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தின், ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில் பயங்கரவாதிகள் பது... மேலும் பார்க்க

ஜகபர் அலி உடலைத் தோண்டியெடுத்து ஆய்வு செய்ய உத்தரவு!

சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள பகுதிகளில் நடந்து வந்த கனிம வளக் கொள்ளைக்கு எத... மேலும் பார்க்க

அரிட்டாபட்டியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, அண்ணாமலை!

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மதுரை அரிட்டாபட்டி சென்றுள்ளனர்.மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மா... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.டோவினோ தாமஸ், திரிஷா நடிப்பில் வெளியான மலையாள மொழிப்படமான ஐடென்டிட்டி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக... மேலும் பார்க்க