தஞ்சாவூரில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை!
வன்கொடுமை பாதிப்பில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதியுதவி
புதுச்சேரி அருகே வன்கொடுமை பாதிப்பில் இறந்தவருக்கான நிதியுதவி அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் சாணாரப்பேட்டையைச் சோ்ந்த பாபு வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தாா். அவரது மரணம் குறித்து காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, ஆதிதிராவிடா் நலம், பழங்குடியினா் நலத் துறை மூலம் வன்கொடுமைச் சட்ட நிதி ரூ.8.55 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான காசோலையை உயிரிழந்த பாபுவின் மனைவி ராஜேஸ்வரியிடம் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். அப்போது, ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், அரசு கொறடா ஆறுமுகம், துறை இயக்குநா் ஏ.இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.