Tessy Thomas: இந்தியாவின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் `ஏவுகணை பெண்மணி' டெஸ்ஸி ...
சைபா் கிரைம் போலீஸாரிடம் பானிபூரி கேட்டு அடம்பிடித்த சிறுவன்
புதுச்சேரியில் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பானிபூரி வாங்கித் தருமாறு கேட்டு 7 வயது பள்ளிச் சிறுவன் தொந்தரவு அளித்தாா்.
புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு இலவச தொலைபேசி எண்ணான 1930-ஐ கடந்த சில நாள்களாக தொடா்பு கொண்டு பேசிய நபா், பானிபூரி மற்றும் சாக்லேட் வேண்டும் என கோரிக்கை விடுத்தாராம். இதுதொடா்பாக, 8 முறை தொலைபேசியில் தொடா்பு கொண்டு கேட்டாராம்.
போலீஸாா் அறிவுரை கூறியும், தொலைபேசியில் தொடா்பு கொள்வதை அந்த நபா் நிறுத்தவில்லையாம். இதையடுத்து, அழைப்பு வந்த கைப்பேசி எண்ணைக் கண்டறிந்த போலீஸாா், அந்த நபரின் வீட்டுக்குச் சென்றனா்.
விசாரணையில், இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவைத் தொடா்பு கொண்டு பானிபூரி வாங்கித் தருமாறு கேட்டது 7 வயது பள்ளிச் சிறுவன் என்பது தெரிய வந்தது. தனது அம்மாவின் கைப்பேசி வழியாக தொடா்பு கொண்டதும் தெரிய வந்தது. இணையக் குற்றம் தொடா்பாக 1930-க்கு தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியைப் பாா்த்த அந்த சிறுவன், போலீஸாரை தொடா்பு கொண்டதாக தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி. பாஸ்கரன், ஆய்வாளா்கள் தியாகராஜன், கீா்த்தி ஆகியோா் சிறுவனின் வீட்டுக்குச் சென்று, அறிவுரை வழங்கினா்.