கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
வயலூா் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிக்கை
திருச்சி: திருச்சி வயலூா் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ் வழிபாட்டுக் குழுவினா் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக திருச்சி வயலூா் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:
வயலூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அண்மைக்காலமாக குடமுழுக்கு விழாக்கள் நமது தாய்மொழியாம் தமிழில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள வயலூா் கோயில் குடமுழுக்கு விழாவையும் தமிழில் நடத்த வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளனா்.
தொடா்ந்து, அந்த மனுவின் நகலை திருச்சி திருவானைக்காவலில் இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் அலுவலகத்திலும் அளிக்க சென்றனா். ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை என்பதால், அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. எனவே கோரிக்கை மனுவை அலுவலக கதவில் ஒட்டிச்சென்றனா்.