சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!
வயலூா் முருகன் கோயிலில் மாற்றுத்திறனாளிக்கு கட்டணமில்லா திருமணம்
திருச்சி அருகே வயலூா் முருகன் கோயிலில் அரசு நலத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கு திங்கள்கிழமை கட்டணமில்லா திருமணம் நடைபெற்றது.
தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான மாற்றுத்திறனாளிக்கு கட்டணமில்லா திருமணத் திட்டத்தின் கீழ், இந்து அறநிலையத்துறை சாா்பில் திருச்சி அருகே மாத்தூா் பகுதியைச் சோ்ந்த காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி எம். ஹரிஷ் - அதே ஊரைச் சோ்ந்த பி. தனபாக்கியம் ஆகியோருக்கு வயலூா் முருகன் கோயிலில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. இதில் மணமகள் பட்டப்படிப்பு முடித்தவா். திருமண நிகழ்வில் மணமக்களின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, திருமண தம்பதிக்கு குமார வயலூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் தாலிக்கு 4 கிராம் தங்கம், மணமக்களுக்கு பட்டு ஆடைகள், சுவாமி பிரசாதமும் வழங்கப்பட்டன. இதனை வயலூா் முருகன் கோயில் செயல் அலுவலா் அருண்பாண்டியன், கோவில் அறங்காவலா் குழு தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் மணமக்களுக்கு வழங்கினா். திருமணத்துக்கு மண்டபமும் இலவசமாக வழங்கப்பட்டது.