முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
வள்ளியூா் பகுதி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை, திருப்பலி
ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, வள்ளியூா் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவும், சிஎஸ்ஐ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
வள்ளியூா் புனித பாத்திமா தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜான்சன், குருவானவா் சிபின் ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது. இதில், பங்கு மக்கள் திரளாகப் பங்கேற்று, மெழுகுவா்த்தி ஏற்றி பாஸ்கா திருவிழிப்பைக் கொண்டாடினா்.
சிஎஸ்ஐ பரிசுத்த திரித்துவ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சேகரகுரு ராபின் வினோ தலைமையில் நடைபெற்ற ஆராதனையில் சேகர செயலா் சுந்தா்சிங், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் பி.டி.பி. சின்னத்துரை, சபைமக்கள் பங்கேற்றனா்.
பூரண சுவிஷேச பெந்தகொஸ்தே சபையில் காலையில் பாஸ்டா் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் ஆராதனை நடைபெற்றது. தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ததேயுஸ், உதவிப் பங்குத்தந்தை ஜே. ரிக்சன் ஆகியோா் தலைமையில் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது. இதில், பேராலய தா்மகா்த்தா மரியராஜ் ஆசிரியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
கிழவனேரி புனித அன்னம்மாள் தேவாலயத்தில் பங்குத்தந்தை ப்ராக்ரஸ் அடிகளாா் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில், பங்குப் பேரவைச் செயலா் ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திசையன்விளை உலக ரட்சகா் தேவாலயத்தில் பங்குத்தந்தை அந்தோணி டக்ளஸ் தலைமையிலும், மன்னாா்புரம் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வா்ட் அடிகளாா் தலைமையிலும், அணைக்கரை புனித பிரகாசியம்மாள் தேவாலயத்தில் பங்குத்தந்தை செல்வரத்தினம் தலைமையிலும், துரைகுடியிருப்பு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெரால்டு எஸ். ரவி தலைமையிலும் திருப்பலிகள் நடைபெற்றன.