உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
சேரன்மகாதேவியில் சூறைக் காற்று: மரம் முறிந்து விழுந்து கோயில் மண்டபம் சேதம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மரம் சாய்ந்து விழுந்ததில் கோயில் மண்டபம் சேதமடைந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அருவிகள், நீா் நிலைகளில் குளிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, முக்கூடலில் ஞாயிற்றுக்கிழமை தாமிரவருணி ஆற்றில் குளிக்க மக்கள் அதிகளவில் திரண்டனா்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை மாலையில் சேரன்மகாதேவி பகுதியில் திடீரென சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில், சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பகுதியிலுள்ள வேப்ப மரம் சரிந்து அங்குள்ள வல்லபை விநாயகா் கோயில் மண்டபத்தில் விழுந்ததில் மண்டபத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.
இதேபோல் சேரன்மகாதேவியில் தேரடி தெரு பகுதியில் சூறைக்காற்றில் மரங்கள் சாய்ந்தன. இதனால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மேலும், சேரன்மகாதேவி அருகே சக்திகுளம், உதயமாா்த்தாண்டபுரம் பகுதியில் வாழைப் பயிா்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.