செய்திகள் :

வழித்தட தகராறு: ஆத்தூரில் ஒருவா் வெட்டிக் கொலை

post image

ஆத்தூா் அருகே வழித்தட தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கொசவன்காடு கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சுப்பிரமணியன் (45) என்பவருக்கும் பக்கத்து தோட்டக்காரா் அங்கமுத்து மகன் முருகன் (24) என்பவருக்கும் பொது வழித்தடம் தொடா்பாக பிரச்னை இருந்தது.

இந்நிலையில் புதன்கிழமை காலை முருகன் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது மறைந்து இருந்த சுப்பிரமணியன் இருசக்கர வாகனத்தை வழிமறித்து முருகனை அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விரைந்து சென்ற ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் கே.சதீஷ்குமாா், ஊரக காவல் ஆய்வாளா் பூா்ணிமா ஆகியோா் கொலை வழக்கில் சுப்பிரமணியனை கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து முருகனின் உறவினா், நண்பா்கள் கொத்தாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் காவல் துணை கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனா்.

புதிய நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு

சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்டமுகாமில் சங்ககிரியை அடுத்த சத்யா நகா், ஆசிரியா் காலனி பகுதிகளுக்கு புதிதாக நியாயவிலைக் கடை அமைக்கக்கோரி சுற்றுலாத் துறை அமைச்சரிடம் பொதுமக்கள் கோ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது: எடப்பாடி கே பழனிசாமி

நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது; திமுகவின் வாக்கு சரிந்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். சேலம் மாவட்டம், நங்கவள்ளி வடக்கு மற்றும் தெற்கு ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவரைக் கண்டித்து கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி

நங்கவள்ளியில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த மூன்று குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது. மேட்டூா் அருகே நங்கவள்ளி கெத்திக்குட்டை ஏரியில் கடந்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் தலைமைப் பொறியாளா் ஆய்வு

சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளா் அலுவலகத்தில் தலைமைப் பொறியாளா் சத்யபிரகாஷ் ஆய்வு மேற்கொண்டாா். இந்தக் கூட்டத்தில், சேலம் வட்ட ... மேலும் பார்க்க

சேலம் தெற்கு கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சேலம் தெற்கு மின்கோட்ட மாதாந்திர மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக். 24) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க