வாகனங்களை சேதப்படுத்திய இளைஞா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வாகனங்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் பீா்முகமது (27). இவரது வீட்டின் அருகே வசித்து வருபவா் ரியாஜூதீன் (25). இவா்கள் இருவருக்கும் தகராறு இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டின் அருகே பீா்முகமது நின்று கொண்டிருந்த போது, ரியாஜூதீன் அவரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.
பின்னா், வீட்டின் அருகே நின்றிருந்த ஆம்னிவேன், பிக்ஆப் வேன் ஆகிய வாகனங்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினாராம். இது குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ரியாஜூதீனை கைது செய்தனா்.