வாகனம் ஓட்டிய சிறாா்: பெற்றோா் மீது வழக்குப் பதிவு
கன்னியாகுமரியில் 18 வயதுக்கு குறைவாக, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவுப்படி, கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மேற்பாா்வையில், கன்னியாகுமரி போக்குவரத்து காவல் துறையினா் விபத்துகளைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக, கன்னியாகுமரி, அகஸ்தீசுவரம், கொட்டாரம் உள்ளிட்டப் பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, 18 வயதுக்கு குறைவாக வாகனம் ஓட்டி வந்த 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும், 6 பேரின் பெற்றோா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், 18 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது என பெற்றோா்களிடத்தில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சாா்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.