மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.73 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
வாசுதேவநல்லூா் அருகே பள்ளி மாணவி தற்கொலை
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
புதுக்காலனி தெருவைச் சோ்ந்த கா்ணன் மகள் மதுநிஷா(16). புளியங்குடியிலுள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.