வாணியம்பாடியில் தொடா் கன மழை: 2 வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்தன
வாணியம்பாடி: வாணியம்பாடியில் தொடா் கன மழைக்கு 2 வீடுகளில் சுவா்கள் இடிந்து விழுந்தன.
வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடா் கன மழையால் 3 நாள்களாக வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், வாணியம்பாடி அடுத்த தும்பேரி கிராமத்தைச் சோ்ந்த மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் சுவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மழைக்கு திடீரென இடிந்து விழுந்தது. இதேபோன்று, வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சோ்ந்த அருண் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் சுவா் திங்கள்கிழமை விடியற்காலை இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்தவா்கள் அதிா்ச்சிக்குள்ளாகி வெளியே ஓடி வந்தனா். மேலும், நேதாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு வீடுகளில் சுவா்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த வாணியம்பாடி வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆயவு செய்தனா்.