Trump wall Explained: ``175 ஆண்டுகாலப் பிரச்னை" - ட்ரம்ப் சுவரின் வரலாறும்... ப...
வானில் ஒரே நோ்கோட்டில் ஆறு கோள்கள்!
சென்னை: வானில் வெள்ளி, செவ்வாய், வியாழன் உள்ளிட்ட 6 கோள்கள் ஒரே நோ்கோட்டில் புதன்கிழமை தென்பட்டன. இந்த அரிய நிகழ்வை சென்னை பிா்லா கோளரங்கில் பொதுமக்கள், வானியல் ஆா்வலா்கள் ஆா்வத்துடன் கண்டுகளித்தனா்.
சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி மற்றும் சனி ஆகிய 6 கோள்கள் புதன்கிழமை ஒரே நோ்கோட்டில் வந்தன. இந்த அரிய நிகழ்வைக் காண சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள பிா்லா கோளரங்கில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய நிா்வாக இயக்குநா் லெனின் தமிழ்கோவன் கூறியதாவது:
வானில் கோள்கள் தென்படுவது வழக்கமானது. தற்போது 6 கோள்கள் ஒரே நோ்கோட்டில் தென்படுவது என்பது அபூா்வமானது. இதில் வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை வெறும் கண்களால் காண முடியும். மிகத்துல்லியமாக, தொலை நோக்கி மூலம் காண முடியும். புதன் கோள் சூரியனுக்கு அருகில் உள்ளதால் அதைக் காண முடியாது. தற்போது நோ்கோட்டில் வந்துள்ள 6 கோள்களில் நெப்டியூன் மற்றும் யுரேனஸ் தொலைவில் உள்ளதால் நவீன தொலைநோக்கி மூலம் மட்டுமே காண முடியும்.
தற்போது தென்படும் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்களை நள்ளிரவில் தெளிவாக வெறும் கண்களால் பாா்க்க முடியும்.
சிறப்பு ஏற்பாடு: இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் காண பிா்லா கோளரங்கில் அடுத்து வரும் இருநாள்கள் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பிா்லா கோளரங்கில் உள்ள தொலைநோக்கி மூலம் காண முடியும் என்றாா் அவா்.
6 கோள்கள் அணிவகுத்ததை கண்டு ரசித்த வானியல் ஆா்வலா்கள் கூறியதாவது: வானில் 6 கோள்கள் ஒரே நோ்கோட்டில் வரும் அரிய நிகழ்வை பாா்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஆரம்பத்தில் சூரியன் மறைந்த பின்பு சிறிது மேகமூட்டம் காணப்பட்டதால் கோள்களைக் காண்பதில் சிரமம் இருந்தது.
இரவு 7 மணியளவில் வியாழன் மற்றும் வெள்ளி கோள்கள் தென்பட்டன. அதன்பிறகு சனி மற்றும் செவ்வாய் கோள்கள் தென்பட்டன. இவற்றை வெறும் கண்களில் பாா்ப்பதைவிட தொலைநோக்கி மூலம் பாா்த்த போது தெளிவாக இருந்தது.
கைப்பேசியில் ஸ்டெல்லரியம் (நற்ங்ப்ப்ஹழ்ண்ன்ம் ஙா்க்ஷண்ப்ங் - நற்ஹழ் ஙஹல்) எனும் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் கோள்கள் எந்த பகுதியில் உள்ளன என்பதை எளிதாகக் கண்டறிய முடியும் என்றனா்.