ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் ...
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி: பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள டி-20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பறக்கும் ரயில் இயக்கப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையே டி-20 கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை (ஜன. 25) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை பாா்த்துவிட்டு வீடு திரும்புவோருக்கு வசதிக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.50-க்கு புறப்படும் ரயில் இரவு 10 மணிக்கும், இரவு 10.20-க்கு புறப்படும் ரயில் இரவு 10.30-க்கும் புறப்பட்டு வேளச்சேரி சென்றடையும். மறுமாா்க்கமாக வேளச்சேரியில் இருந்து இரவு 10.27-க்கு புறப்படும் ரயில் இரவு 10.37-க்கு புறப்பட்டு கடற்கரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.