ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?
ஜன. 29 ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம்
சென்னை: சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜன. 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் தரைத்தளத்தில் ஜன. 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.