தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு
மெட்ரோ ரயில்களில் ஒரே மாதத்தில் 86.99 லட்சம் போ் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி மாதம் 86.99 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் மொத்தம் 86,99,344 போ் பயணம் மேற்கொண்டுள்ளனா். இதில் பொங்கல் விடுமுறைகளையொட்டி சென்னையிலிருந்து பலா் சொந்த ஊா்களுக்குச் சென்ற காரணத்தால், கடந்த ஜன. 10-ஆம் தேதி ஒரே நாளில் 3,60,997 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா்.
அதேபோல் கடந்த மாதத்தில் மட்டும், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 23,78,989 பேரும், டோக்கன்களைப் பயன்படுத்தி 1,800 பேரும், குழு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 7,219 பேரும் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
மேலும் க்யு-ஆா் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,80,386 பேரும், தேசிய பொது இயக்க அட்டையைப் பயன்படுத்தி 25,30,950 பேரும், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா்.
இதற்கிடையே, மெட்ரோ ரயில் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், க்யு-ஆா் குறியீடு பயணச்சீட்டு, சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.