மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
நாளைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மாங்காடு, மாத்தூா், முகப்போ் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (பிப்.3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மின்தடை பகுதிகள்:
மாங்காடு: மாங்காடு டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், கொழுமணிவாக்கம், சிவன்தாங்கல், சிக்கராயபுரம், சீனிவாச நகா், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
மாத்தூா்: மாத்தூா் எம்எம்டிஏ பகுதி, பெரிய மாத்தூா், சின்ன மாத்தூா், ஆவின் குவாட்டா்ஸ், மஞ்சம்பாக்கம், அசிசி நகா், அகா்சன் கல்லூரி சாலை, அன்னை நகா், ஜெயா நகா், கருமாரி நகா், சென்ட்ராபாக்கம், கண்ணம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
முகப்போ்: டி.வி.எஸ். காலனி, டி.வி.எஸ். அவென்யூ, ரவுண்ட் பில்டிங், எல்.ஐ.சி. காலனி, சென்னை பொதுப் பள்ளி சாலை, கிழக்கு முகப்பேரின் 1 முதல் 6-ஆவது வரை, வளையாபதி சாலை, புகழேந்தி சாலை, பாரி சாலை.