கைகொடுத்த படிப்பு; ஆட்டோவில் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த காவலர் - திருப்பூரில் ...
வாய்க்காலில் மூழ்கி 7 வயது சிறுமி பலி
திருச்சி அருகே வாய்க்காலில் மூழ்கி 7 வயதுச் சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி ராம்ஜி நகா் அருகேயுள்ள என். குட்டப்பட்டு திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் அருமைராஜ். இவா் வெள்ளிக்கிழமை மாலை தனது மனைவி, மகள் அக்ஷதா (7) ஆகியோருடன் வடக்கு பாகனூா் கட்டளை வாய்க்கால் படித்துறை பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, வாய்க்காலில் இறங்கிக் குளித்த அக்ஷிதாவை வெள்ளநீா் அடித்துச் சென்றது. இதைக் கவனிக்காமல் இருந்த பெற்றோா், பின்னா் அருகிலிருந்தவா்கள் உதவியுடன் நீரில் மூழ்கிய சிறுமியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.