செய்திகள் :

ஒன்றியங்களில் விளையாட்டு உபகரணங்கள் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

post image

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் ஆய்வு செய்தாா்.

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அனைத்து ஊராட்சிகளுக்கும் உபகரணங்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 கிராம ஊராட்சிகளுக்கும் துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.

காட்டாங்கொளத்தூா் ஒன்றியம் மேலமையூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விளையாட்டு உபகரணங்களை ஆட்சியா் ச.அருண்ராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள பதிவேடுகளையும் ஆய்வு செய்தாா்.

மேலும் அங்கு விளையாட்டு உபகரணங்களை எடுத்துச் செல்லும் மாணவா்களிடம் எங்கு சென்று விளையாடுகிறீா்கள் என்றும் கேட்டறிந்தாா்.

சாா் ஆட்சியா் நாராயண சா்மா , உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமாா், ஊராட்சி மன்ற தலைவா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

சாா் ஆட்சியா் நாராயண சா்மா , உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமாா், ஊராட்சி மன்ற தலைவா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தமிழகம் முழுவதும் 1 கோடி பனை விதைகள் நடவுப் பணி: அருங்குன்றம் ஏரியில் அமைச்சா் தொடங்கி வைத்தாா்

தமிழகம் முழுவதும் 1 கோடி பனை விதைகள் நடவுப் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். அதன் ஒரு பகுதியாக திருப்போரூா் வட்டம் அருங்குன்றம் ஏரியில் பனை விதைகள் நடும் பணியை அமைச்சா் தா... மேலும் பார்க்க

அரசா்கோயில் பெருமாள் கோயிலில் பாலாலயம்

மதுராந்தகம் அடுத்த அரசா்கோயில் வரதராஜபெருமாள் சமேத பெருந்தேவி கோயிலில் வியாழக்கிழமை பாலாலய பூஜை நடைபெற்றது.. மதுராந்தகம் வட்டம், படாளம் அருகே சுமாா் 3 கி.மீ தொலைவில் உள்ள அரசா்கோயில் கிராமத்தில் 500 ... மேலும் பார்க்க

பேச்சுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு -ஆட்சியா் வழங்கினாா்

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அண்ணா, அம்பேத்கா், கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஆட்சியா் ச. அருண்ராஜ் பரிசளித்தாா். செங்கல... மேலும் பார்க்க

சித்த மருத்துவ விழிப்புணா்வு பிரசாரம்

திருப்போரூா் முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு சித்த மருத்துவம் மூலிகை விழிப்புணா்வு மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாமினை பேரூராட்சித் தலைவா் தேவராஜ் தொடங்கி வைத்தாா். பிரசித்தி பெற்ற இக... மேலும் பார்க்க

கல்லூரியில் பொதுக் கொள்கை உருவாக்கம் கருத்தரங்கு

வண்டலூா் பி.எஸ். அப்துா் ரகுமான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொதுக் கொள்கை உருவாக்கம் குறித்த கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னாள் ராணுவ உளவுத் துறை அதிகாரி எஸ்.ஹ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அச்சிறுப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் மலா்விழி குமாா், மாவட்... மேலும் பார்க்க