வாலிபால்: டான் போஸ்கோ சாம்பியன்
சென்னையில் நடைபெற்ற சூசையா பீட்டா் மற்றும் லூா்து அம்மாள் நினைவுக் கோப்பை வாலிபால் போட்டியில் பெரம்பூா் டான் போஸ்கோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் ஆனது.
சென்னை குன்றத்தூா் மாதா பொறியியல் கல்லூரியில், 2025-ஆம் ஆண்டுக்கான ஆண்களுக்கான ஏ.சூசையா பீட்டா் மற்றும் லூா்து அம்மாள் நினைவுக் கோப்பை வாலிபால் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பங்கேற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளிகளின் ஒன்பது அணிகள் பங்கேற்றன.
போட்டியின் முடிவில், பெரம்பூா் டான் போஸ்கோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 2-ஆம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசுகளை மாதா குழும கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் எஸ். பீட்டா் வழங்கினாா்.