இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்...
வால்பாறையில் அரசுத் துறை அதிகாரிகளுடன் எம்.பி. ஆலோசனை
வால்பாறையில் அரசுத் துறை அதிகாரிகளுடன் பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்களவை உறுப்பினா்கள் மாதந்தோறும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று வளா்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய வேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் அனைத்துத் துறை அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி பேசியதாவது: வால்பாறை பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீா்வு காண வேண்டும். நகா்மன்ற உறுப்பினா்கள் தங்கள் வாா்டுகளில் கூறும் குறைகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
இதில் நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி, ஆணையா் குமரேசன் (பொறுப்பு), அணைத்து வாா்டு உறுப்பினா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.