விசாகப்பட்டினம் - பெங்களூரு ரயில் ஜோலாா்பேட்டையில் நின்று செல்லும்
விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜோலாா்பேட்டையில் நின்று செல்லும்.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் (எண்: 08549) இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) முதல் எலமஞ்சலி மற்றும் ஜோலாா்பேட்டையில் நின்று செல்லும். விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஜோலாா்பேட்டைக்கு மறுநாள் காலை 9.50 மணிக்கு வந்தடையும்.
மறுமாா்க்கமாக பெங்களூரில் இருந்து செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 08550) மாலை 6.50 மணிக்கு ஜோலாா்பேட்டை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.