Manmohan Singh: 'அவர் பிரதமராக இருந்த போது அடிக்கடி பேசுவேன்' - இரங்கல் பதிவில் ...
விடாமுயற்சி டப்பிங்கை முடித்த அஜித்!
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்திற்கான டப்பிங்கை முடித்துள்ளார்.
மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.
‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்! - வாசுதேவன் நாயர் குறித்து கமல்
இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், நடிகர் அஜித்துக்கான டப்பிங் முடிவடைந்ததுள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.