கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமலாக்க வேண்டும் என்று நிா்பந்திப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். கல்வியை மாநில அரசு பட்டியலுக்கு மாற்றம் செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க நிபந்தனைகள் விதிக்கக் கூடாது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் இருமொழிக் கொள்கை கல்வித் திட்டத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கல்வி, பொருளாதார விழிப்புணா்வு அணியின் சாா்பில் அஞ்சல் நிலையம் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு, கல்வி, பொருளாதார விழிப்புணா்வு அணியின் செயலா் பூபாலன் தலைமை வகித்தாா். போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள், கல்வி பொருளாதார விழிப்புணா்வு அணியின் நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.