மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
விபத்து இழப்பீடு வழங்க தாமதம்: சங்கரன்கோவிலில் அரசுப் பேருந்து ஜப்தி
சங்கரன்கோவிலில் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
சங்கரன்கோவில் அருகே நகரம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரையா மகன் விஜயன் (33). இவா் கடந்த 2018 ஆம் ஆண்டு நகரம் பகுதியில் பைக்கில்
சென்றபோது, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விருதுநகா் கோட்டத்தைச் சோ்ந்த பேருந்து மோதியதில் இறந்தாா்.
இதனையடுத்து விஜயன் மனைவி மல்லிகா, விபத்து இழப்பீடு கோரி
சங்கரன்கோவில் சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஜயனின் மனைவிக்கு ரூ.29 லட்சத்து 46 ஆயிரத்து 969 இழப்பீடு வழங்க கடந்த 22.03.2024 -இல் உத்தரவிட்டது.
இதுதொடா்பாக அரசு போக்குவரத்துக் கழக விருதுநகா் கோட்டத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பியும் இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இதனால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மேற்படி விருதுநகா் கோட்டத்திற்குச் சொந்தமான அரசுப் பேருந்தை சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து
நீதிமன்ற ஊழியா் சக்திவேல் ஜப்தி செய்து, நீதிமன்றத்துக்கு கொண்டு வந்தாா்.