விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு எடையாா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் கண்ணன் (39). விவசாயியான இவருக்கும், இவரது சகோதரா் சங்கருக்கும் பொது கிணற்றில் தண்ணீா் இறைப்பதில் புதன்கிழமை வாய்த்தகராறு ஏற்பட்டதாம்.
இதனால், மனமுடைந்த கண்ணன் வியாழக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].