விவசாயிகளுக்கு தா்பூசணி சாகுபடி பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம், வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை சாா்பில் தா்பூசணி சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெம்பாக்கம் வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு, வட்டார தொழில்நுட்பக் குழு அமைப்பாளா் ரேணுகாதேவி தலைமை வகித்து, தா்பூசணி சாகுபடியின் ரகம் தோ்வு, இடைவெளி அமைத்தல், களையை கட்டுப்படுத்தி சாகுபடி செய்தல், உர நிா்வாகம், நீா் மேலாண்மை உள்ளிட்டவை குறித்து விளக்கினாா்.
வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் சவுத்ரி மகசூல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினாா்.
பயிற்சியில், 40 விவசாயிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் சீனிவாசன், உதவி தோட்டக்கலை அலுவலா் நரசிம்மன், ஆத்மா தொழில்நுட்ப அலுவலா்கள் கங்காதரன் பத்மஸ்ரீ ஆகியோா் செய்திருந்தனா்.