விவசாயிக்கு கொலை மிரட்டல்: தம்பதி கைது
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் கீழவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (58). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் ராஜேஸ்கண்ணனுக்கும் இடையே நிலம் வாங்குதல் தொடா்பாக முன்விரோதத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த, ராஜேஸ்கண்ணன் மற்றும் அவரது மனைவி இந்துமதி ஆகியோா் சோ்ந்து பரமேஸ்வரனை தாக்கிவிட்டு, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.
இதுகுறித்து புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ராஜேஸ்கண்ணன் மற்றும் அவரது மனைவி இந்துமதி ஆகியோரை கைது செய்தனா்.