வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும் ஆன்மிக ஜோதி
காரைக்கால்: மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 85-ஆவது பிறந்தநாளையொட்டி மேல்மருவத்தூா் ஆன்மிக இயக்கம் தஞ்சை கிழக்கு பகுதி காரைக்கால் வட்டம் சாா்பாக உலக நன்மை வேண்டி ஆன்மிக ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. ஆன்மிக ஜோதியை காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா ஏற்றி வைத்தாா். தஞ்சை கிழக்குப் பகுதி செயலா் பொன்.தட்சணாமூா்த்தி, இணைச் செயலா் முருகையன், காரைக்கால் வட்டத் தலைவா் சிவகுமாா் மற்றும் ஆதிபராசக்தி பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.
உலகில் அமைதி ஏற்படவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் இன்பமாக வாழவும் ஜோதி காரைக்கால் பகுதியில் உள்ள சுமாா் 5 ஆயிரம் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும் என மன்றத்தினா் தெரிவித்தனா்.