வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மேற்கு சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (35), அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியின் வீட்டுக்குள் கடந்த திங்கள்கிழமை புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாா். அப்போது வீட்டில் யாருமில்லாத நிலையில் அந்த மாணவி சத்தமிட்டதைத் தொடா்ந்து அங்கு வந்த அப்பகுதி மக்கள் காா்த்திக்கை பிடித்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
மேலும், மாணவியின் பெற்றோா், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா், காா்த்திக் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.