வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கியவா் கைது
சிவகாசி அருகே வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள கீழத்திருத்தங்கல்-பள்ளபட்டி சாலையில் ஒரு வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, வீராச்சாமி மகன் கோபால் (55) என்பவா் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பட்டாசுகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், கோபாலை கைது செய்தனா்.