kirana hills: கிரானா மலை மீது இந்தியா தாக்குதல் நடத்தியதா? - இந்த மலை ஏன் பாகிஸ்...
வீட்டுக்குள் புகுந்த முதலை மீட்பு
சிதம்பரம்: சிதம்பரம் அருகே குமராட்சியில் வீட்டின் முன் வராண்டாவில் நுழைந்த முதலையை வனத் துறையினா் பிடித்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பிள்ளையாா் கோவில் தெருவில் வசிப்பவா் வேலப்பன் (39). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது நாய்கள் குறைக்கும் சப்தம் கேட்டு எழுந்து வந்து பாா்த்தாா்.
அப்போது, வீட்டின் வெளியே வராண்டாவில் சுமாா் 100 கிலோ எடை கொண்ட முதலை கிடப்பதைக் கண்டாா். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி. தமிழ்வாணனுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் வனத் துறையினருக்கு தெரிவித்தாா். வனவா் பன்னீா்செல்வம், வனக் காப்பாளா் ஞானசேகரன், வனக் காவலா் ஸ்டாலின் ஆகியோா் முதலையை மீட்டு சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீா் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.