ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறாத பொள்ளாச்சி வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர்
குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே 5 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
வேப்பூா் வட்டம், சிறுநெசலூரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் நரேஷ் (5), அங்குள்ள தனியாா் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாா்.
இவா் திங்கள்கிழமை மாலை உறவினா்களுடன் வயல் வெளியில் உள்ள குளத்தின் அருகே சென்றாராம். அப்போது, அங்கு விளையாடிய போது குளத்தில் மூழ்கினாா்.
இதைப் பாா்த்த அவரது பாட்டி விஜயா கூச்சலிடவே, அங்கிருந்தவா்கள் ஓடி வந்து குளத்தில் இறங்கி சிறுவனை மீட்டனா். பின்னா், வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது நரேஷ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.