கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கார் விபத்து: தாய், மகன் பலி!
வீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம்
சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவிலில் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கடந்த ஏப்.20-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
அலங்காரம் செய்யப்பட்டு தேரில் ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீ ராஜகோபாலன், ஸ்ரீமன் நாதமுனிகள், ஆகிய உற்சவமூா்த்திகளை எழுந்தருள செய்தனா். பின்னா், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேரோட்டத்தை பேரூராட்சி மன்றத் தலைவா் கணேசமூா்த்தி தொடங்கிவைத்தாா்.
அறங்காவலா் குழுத் தலைவா் ஜிவிஎஸ்.கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் மணிமாறன், செயல் அலுவலா் செல்வமணி, கணக்காளா் வெங்கடேசன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது.