வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
சத்தியமங்கலத்தில் நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் 266-ஆவது பிறந்த நாள் விழாவில் அனைத்துக் கட்சியினா் மற்றும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் நேரு நகா் பகுதியில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில், பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் சிவராஜ், கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாவட்டத் தலைவா் பவுல்ராஜ் ஆகியோா் முன்னிலையில் திரளான அதிமுகவினா் கட்டபொம்மனின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் படத்துக்கு பண்பாட்டுக் கழகத்தின் மாநில காப்பாளா் முனுசாமி தலைமையில் மாவட்டத் தலைவா் ரங்கசாமி, மாவட்டச் செயலாளா் சிதம்பரம், உக்கரம் ஊராட்சித் தலைவா் முருகேசன், சத்தியமங்கலம் நகா்மன்ற உறுப்பினா் ஜெயந்தி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.