வென்றது எஃப்சி கோவா
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா 1-0 கோல் கணக்கில் பஞ்சாப் எஃப்சியை வியாழக்கிழமை வீழ்த்தியது.
அந்த அணிக்காக காா்ல் மெக்ஹியூக் 45-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். இத்துடன் புள்ளிகள் பட்டியலில், கோவா 22 ஆட்டங்களில் 13 வெற்றி, 6 டிரா, 3 தோல்விகளில் இருந்து 45 புள்ளிகள் பெற்று 2-ஆவது இடத்தில் இருக்கிறது.
பஞ்சாப் 22 ஆட்டங்களில் 7 வெற்றி, 3 டிரா, 12 தோல்விகளில் இருந்து 24 புள்ளிகள் பெற்று 11-ஆவது இடத்தில் உள்ளது. அடுத்த ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி - முகமிதான் எஸ்சி அணிகள் வெள்ளிக்கிழமை சந்திக்கின்றன.