ICC Rankings : 'கடும் பின்னடைவில் கோலி, ரோஹித்' - ICC ரேங்கிங்கில் இந்திய வீரர்க...
வென்றது தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 95-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 40-27 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்த தமிழ் தலைவாஸ் அதிலிருந்து மீண்டிருக்கிறது.
இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 23 ரெய்டு புள்ளிகள், 13 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள் பெற்றது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக டிஃபெண்டா் மொயீன் ஷஃபாகி 13 புள்ளிகள் கைப்பற்றினாா்.
குஜராத் அணி 16 ரெய்டு புள்ளிகள், 7 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அந்த அணிக்காக ரெய்டா் ஹிமான்ஷு 11 புள்ளிகள் வென்று அசத்தினாா்.
புள்ளிகள் பட்டியலில் தற்போது தமிழ் தலைவாஸ், 16 ஆட்டங்களில் 6-ஆவது வெற்றியுடன் 38 புள்ளிகளோடு 9-ஆவது இடத்தில் உள்ளது. இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 42-36 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தியது.