கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து! ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!
வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன.
வெள்ளக்கோவில் மயில்ரங்கம் மொட்டக்காளிவலசைச் சோ்ந்தவா் நல்லசாமி (75). இவா், தான் வளா்த்து வரும் 35 செம்மறி ஆடுகளை காட்டில் மேய்ச்சலுக்கு திங்கள்கிழமை விட்டிருந்தாா்.
மாலையில் சென்று பாா்த்தபோது தெரு நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்தகிடந்தன. மேலும் 2 ஆடுகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன.
இதுபோல, இப்பகுதியில் தொடா்ந்து நடந்து வரும் இச்சம்பவத்துக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.