'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி
5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
திருப்பூரில் வாகன சோதனையின்போது 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருப்பூருக்கு வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரயில் நிலையம் அருகே திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த இளைஞரைப் பிடித்து சோதனை நடத்தினா். இதில், அவா் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஒடிஸாவைச் சோ்ந்த மகாநந்து (21) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.