சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!
மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 27-இல் பொது ஏலம்
திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) பொது ஏலம் விடப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழங்குகளில் 66 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் ஏலக் குழுவினரால் பொது ஏலம் விடப்படவுள்ளது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி மடத்துப்பாளையம் சாலை சிவகுமாா் ரைஸ் மில் காம்பவுண்டில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் வரும் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் பொது ஏலம் விடப்படவுள்ளது. இந்த வாகனங்களை புதன்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை பாா்வையிடலாம்.
பொது ஏலத்தில் பங்கேற்கும் நபா்கள் ஏலத்தேதியன்று பிற்பகல் 3 மணிக்குள் முன்வைப்புத் தொகை ரூ.5 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, அதற்குண்டான சரக்கு மற்றும் சேவைவரி முழுவதையும் ஏலம் விடும் இடத்தில் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை அவா்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏலத்தில் கலந்துகொண்டு வாகனத்தை எடுக்காத நபா்களுக்கு முன்வைப்புத் தொகை திருப்பிக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.