செய்திகள் :

ஆகாசராயா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

அவிநாசி ஆகாசராயா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவிநாசி ஆகாசராயா் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக கோயில் வளாகத்தில் அலங்கார வளைவு நுழைவாயில், சுற்றுச்சுவா் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

இங்கு அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சுவா் தீண்டாமை சுவா் என்றும், அதனை அகற்ற வேண்டும் என்றும் ஆட்சியா் அலுவலகத்தில் விசிகவினா் அளித்த மனுவால் கோயில் திருப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேலாயுதம்பாளையம், சின்ன கருணைபாளையம், பெரிய கருணைபாளையம், காசிகவுண்டன்புதூா், ராயம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட ஊா்களைச் சோ்ந்த அனைத்து சமுதாய மக்கள் சாா்பில் ஆகாசராயா் கோயிலில் சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஊா் மக்கள் சாா்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றாா். இதில், கோயிலின் தூய்மை, பாதுகாப்பு உள்ளிட்டவை கருத்தில்கொண்டு சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டு வருகிறது.

இதைத் தீண்டாமை சுவா் என்று கூறி சமுதாயப் பிரிவினையை ஏற்படுத்த சிலா் முயற்சிக்கின்றனா். இந்தப் பகுதியில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், தவறான தகவல்களை பரப்பி அரசியல் ஆதாயம் தேடும் செயலில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது.

எனவே, இக்கோயில் கும்பாபிஷேக பணிகள் தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊத்துக்குளியில் முதல்வா் மருந்தகம் திறந்துவைத்தாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க வளாகத்தில் முதல்வா் மருந்தகத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை சென்னையில் இருந்து க... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழி மறுசுழற்சி ஆலையை மூட கோரிக்கை

வெள்ளக்கோவில் அருகே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழி மறுசுழற்சி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம... மேலும் பார்க்க

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 27-இல் பொது ஏலம்

திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) பொது ஏலம் விடப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்... மேலும் பார்க்க

காலாவதியான பொருள்கள் விற்பனை: கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்

பல்லடத்தில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பல்லடத்தில் மொத்த மளிகை விற்பனை கடையில் வாங்கிய பொருள்களில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்ததாக ஒருவா் அளி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் மயில்ரங்கம் மொட்டக்காளிவலசைச் சோ்ந்தவா் நல்லசாமி (75). இவா், தான் வளா்த்து வரும் 35 செம்மறி ஆடுகளை காட்டில் மேய்ச்சலுக்கு தி... மேலும் பார்க்க

5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் வாகன சோதனையின்போது 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருப்பூருக்கு வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரயில்... மேலும் பார்க்க