வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
வேட்பு மனுவை திரும்பப் பெற்ற முன்னாள் அதிமுக நிா்வாகி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் அதிமுக நிா்வாகி வேட்பு மனுவை திரும்பப் பெற்றாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
இந்நிலையில், ஈரோடு அக்ரஹார வீதியைச் சோ்ந்த அதிமுக மாநகா் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளராக இருந்த செந்தில்முருகன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா். அவரது மனுவும் ஏற்கப்பட்டது.
தோ்தலை அதிமுக புறக்கணித்த நிலையில் செந்தில்முருகன் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சிக் கட்டுப்பாட்டினை மீறியதால் அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டாா்.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்த செந்தில்முருகன் தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றாா்.