செய்திகள் :

வேலூர் தீர்த்தகிரி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்!

post image

வேலூர் அருகே தீர்த்தகிரி மலை மீது அமைந்துள்ள முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

வேலூர் அருகே புதுவசூர் தீர்த்தகிரி மலை மீது அமைந்துள்ள வடிவேலு சுப்பிரமணியர் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து முருகரை வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த மலை மீது முருகருக்கு 92 அடி உயரமுள்ள சிலை அமைக்கப்பட்டு ஊர் பெரியவர்களால் கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

இன்று கும்பாபிஷேகம் செய்ய பல்வேறு நதிகளில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு யாகசாலை அமைக்கப்பட்டு வேத மந்திரங்களை வேத மேளதாளங்களுடன் புனித நீரை டிரோன் மூலமாக எடுத்துச் சென்று புதிதாக அமைக்கப்பட்ட 92 அடி உயரமுள்ள முருகர் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த விழாவில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அருகே உள்ள ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்து உலகின் மூன்றாவது உயரமுள்ள சிலை என கருதப்படும் முருகனை அரோகரா அரோகரா என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.

இந்தக் கும்பாபிஷேக விழாவில் மக்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்கு வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் காவல்துறையினரால் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி, பராசக்தி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில், மதராஸி படத்தின் படப்பிடிப்பை நிறை... மேலும் பார்க்க

1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

கடந்த 1750ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 275 ஆண்டுகளுக்குப் பின், கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருள்மிகு பத்... மேலும் பார்க்க

2 படங்களின் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் கார்த்தி!

நடிகர் கார்த்தி இரண்டு திரைப்படங்களை முழுமையாக முடித்துள்ளார். நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் முக்கியமாக, நலன் குமாரசாமி இயக... மேலும் பார்க்க

கமல் ஹாசன் தயாரிப்பில் படம் இயக்கும் சு. அருண் குமார்?

இயக்குநர் சு. அருண் குமார் நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சித்தா, வீர தீர சூரன் உள்ளிட்ட படங்கள் கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் குமார். இவர் அடுத்ததாக... மேலும் பார்க்க

முதன்முதலாக லெஜண்ட் ரொனால்டோவை எதிர்கொள்ளும் இளம்புயல் யமால்!

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணியும் ஸ்பெயின் அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளின் நட்சத்திர வீரர்களான ரொனால்டோவும் (40) லாமின் யமாலும் (17) மோதுகிறார்கள். ரொனால்டோ த... மேலும் பார்க்க

அகமதாபாதை வீழ்த்தியது ஜெய்ப்பூா்

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 சனிக்கிழமை முதல் ஆட்டத்தில் அகமதாபாதை வழ்த்தியது ஜெய்ப்பூா். ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் ஜெய்ப்பூரின் கனக் ஜா 3-0 என அகமதாபாதின் திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவாவை வென்றாா். மகளிா் ஒற... மேலும் பார்க்க